நாய்களால் குதறிக்கொல்லப்பட்ட குட்டி மான் : பரிதவிப்போடு சுற்றி வந்த தாய் மான்..!

0 3256
நாய்களால் குதறிக்கொல்லப்பட்ட குட்டி மான் : பரிதவிப்போடு சுற்றி வந்த தாய் மான்..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த மான் குட்டியை நாய்கள் கடித்துக் கொன்றதாக கூறப்படும் நிலையில், தாய் மான் பரிதவிப்புடன் தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்தது காண்போரை கலங்கடித்தது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனச்சரகததிற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

வேட்டையாம்பாளையத்தில் உள்ள வாழை, கடலை, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ள தோட்டம் ஒன்றுக்குள் புள்ளிமான் ஒன்று தனது குட்டிகளுடன் இரை தேடி நுழைந்துள்ளது. குட்டிகளில் ஒன்று தாய் மானைப் பிரிந்து சென்ற நிலையில், அதனை அங்குள்ள நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இதில் 3 மாத குட்டியான அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் மான்குட்டியின் உடலை அப்புறப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தாய் மான் தனது மற்ற குட்டிகளுடன் பரிதவிப்புடன் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது காண்போரை கலங்கடித்தது.

மற்ற குட்டிகளுக்கும் நாய் உள்ளிட்ட விலங்குகளால் ஆபத்து நேரும் முன், தாய் மானையும் குட்டிகளையும் உடனடியாகப் பிடித்து வனத்துக்குள் விட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments