சர்வதேச பெண்கள் கிரிக்கெட் தரவரிசை - மீண்டும் முதலிடத்தை பிடித்தார் இந்திய மகளிரணி கேப்டன் மிதாலிராஜ்

0 3399

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. வெளியிட்டுள்ள மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய மகளிரணி கேப்டன் மித்தாலி ராஜ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன் 8-வது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் விளாசியதன் மூலம் முதலிடத்தை தன் வசமாக்கியுள்ளார்.

8ஆவது முறையாக முதலிடத்தை பிடித்து மகளிர் கிரிக்கெட்டின் முடிசூடா ராணியாக ஜொலிக்கும் மித்தாலி ராஜ், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் என அனைத்து நிலைகளிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மகளிர் பிரிவில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments