40 ஆவது பிறந்த நாள் காணும் கேப்டன் கூல்..! வாழ்த்து மழையில் எம்.எஸ். தோனி

0 3522

40 ஆவது பிறந்த நாள் காணும் கிரிக்கெட் நாயகன் மகேந்திர சிங் தோனிக்கு பல தரப்பில் இருந்தும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முன்னாள் கேப்டனுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, முகம்மது கைஃப் உள்ளிட்ட பல வீரர்கள் தோனி தங்களுக்கான முன்மாதிரி என புகழ்ந்துள்ளனர். சென்னை சூப்பர்கிங்ஸ் அணி  நம்ம தல தோனிக்கு சூப்பர் பிறந்தநாள் என டுவிட் செய்துள்ளது.

இப்போதும் எப்போதும் ஒரே தல தான் எனவும் சிஎஸ்கேயின் டுவிட்டரில் உற்சாகமாக குறிப்பிட்டுள்ளது.  2004 ல் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தோனி துவக்கினார். 16 ஆண்டுகளாக இந்தியாவுக்காக கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 538 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments