ஓடும் ரயிலில் ஏற முயன்று கால் தவறி விழுந்த இளைஞர்... ஓடிச் சென்று காப்பாற்றிய பெண் காவலர்கள்

0 3375

சேலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில இளைஞரை, பெண் காவலர்கள் இரண்டு பேர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பீகாரைச் சேர்ந்த சிவன்குமார் என்ற அந்த இளைஞர் ரயில் நிற்பதற்குள் ஓடும் போதே ஏற முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் இடறி அவர் நடைமேடையில் விழுந்ததோடு, சிறிது தூரம் இழுத்துவரப்பட்டார். இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள் மஞ்சுவும், அஸ்வினியும் இளைஞரை இழுத்து வந்து உயிரைக் காப்பாற்றினர்.

இளைஞரின் உயிரைக் காப்பாற்ற கையில் இருந்து உடமைகளை தூக்கியெறிந்துவிட்டு பெண் காவலர் ஓடிச் சென்றனர்.
காப்பாற்றப்பட்ட இளைஞர் பின்னர் வேறொரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments