யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி

0 2882

யூரோ கோப்பை  கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

லண்டனில் நடந்த அரையிறுதிப் போட்டியில், இத்தாலி ஸ்பெயினை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.அதன்பின்னர் கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

மற்றோர் அரை இறுதி போட்டியில், இங்கிலாந்தும், டென்மார்க்கும் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி வரும் 12 ஆம் தேதி நடக்க உள்ள இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்கொள்ளும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments