மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0 1582

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, கோவிட்டுக்கு எதிரான யுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுடன் சர்வதேச விவகாரங்கள் குறித்து அதிபர் விளாதிமீர் புதினுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் பிரமகோவ் உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகள் அமைப்பின் கருத்தரங்கில் ஜெய்சங்கர் உரை நிகழ்த்த உள்ளார்.

  கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இந்த சந்திப்புகள் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments