தமிழ்நாட்டில் மேலும் 3,479 பேருக்கு புதிதாக கொரோனா ; 73 பேர் பலி

0 3360
தமிழ்நாட்டில் மேலும் 3,479 பேருக்கு புதிதாக கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 3,479 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. ஒரே நாளில் 3,855 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

எவ்வித இணை நோயும் இன்றி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த கடலூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 73 பேர் பலியாகினர். மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 477ஆக சரிந்துள்ளது.

சென்னையில் 209 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 407ஆகவும் ஈரோடு மாவட்டத்தில் 311 ஆகவும் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments