”ஜூன் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.92,849 கோடி” -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

0 2629

ஜிஎஸ்டி வருவாய், 8 மாதங்களுக்குப் பின் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.

ஜூன் மாதம் 92 ஆயிரத்து 849 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, இது 2 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததே, ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சரிந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments