நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

0 3090

நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சியைச் சேர்ந்த நபரை சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் வருவதாக அண்மையில் புகார் அளித்திருந்தார்.

ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்-ஆப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் வைத்து விசாரணை நடத்திய போலீசார், அந்த நபர் திருச்சியைச் சேர்ந்த ராய் என கண்டுபிடித்ததோடு அவரை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments