திரிஷ்யம் பட பாணியில் நாடகம்.. பரோலில் வந்த கொலைக்குற்றவாளிக்கு மீண்டும் சிறை..!

0 2109

டெல்லியில் திரிஷ்யம் பட பாணியில் தன்னைத்தானே தாக்கி விட்டு, பக்கத்து வீட்டுக்காரர் மீது பழி போட முயன்ற கொலைக்குற்றவாளி போலீசின் பிடியில் சிக்கினார்.

வடக்கு டெல்லியின் மஞ்சு கா திலா என்ற இடத்தை சேர்ந்த அமர்பால் என்பவர் அருகாமையில் வீட்டில் உள்ள ஓம்பிர் என்பவரின் தாயை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளான்.

பிறகு, இந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க திரிஷ்யம் பட பாணியில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னை தனது உறவினர்கள் மூலம் சுட வைத்து அதற்கு காரணம் அருகாமையில் வீட்டில் உள்ள ஓம்பிர் தான் காரணம் என நம்ப வைக்க முயற்சித்துள்ளான். இதனை கண்டுபிடித்த போலீசார் அமர்பாலை மறுபடியும் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments