நாடு முழுவதும் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

0 3653
நாடு முழுவதும் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும், 4 மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

கர்நாடக ஆளுநராக தல்வார்சந்த் கெலாட்டும், மிசோரம் ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டியும், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சங்குபாய் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மிசோரம் ஆளுநராக இருந்த பிஎஸ்.  ஸ்ரீதரன் பிள்ளை கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரியானா ஆளுநராக இருந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுராவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுரா ஆளுநர் ரமேஷ் பயிஸ் ஜார்கண்ட் ஆளுநராகவும், இமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா  அரியானா ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments