வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கள் தான்...! கோவையில் போலீசாரை அதிர வைத்த போதை ஆசாமிகள்

0 18806

கோவையில் மதுபோதையில் வந்த ஆசாமிகள் இருவர், வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான் எனக்கூறி போலீசாரை அதிர வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருமத்தம்பட்டியைச் சேர்ந்த இரண்டு பேர் மதுபோதையில் சாலையில் செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசாரின் விசாரணைக்கு உரிய பதிலளிக்காமல், உளறியதோடு, எதிர்க் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக் கொண்டு தாக்கிக் கொண்ட அவர்களை போலீசார் மிரட்டிய நிலையில், வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கள் தான் எனக் கூறி அதிர வைத்தனர்.

பின்னர், ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் போதை தெளிய வைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments