தொல்லை தரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்

0 3378
தொல்லை தரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்

தொல்லைதரும் போன் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் அனுப்பும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது.

தொலைபேசியில் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் சில நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றைத் தவிர்க்க, தொல்லை தரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் 10 மீறல்களுக்கு ஆயிரம் ரூபாயும், 10 முதல் 50 முறை தொந்தரவு செய்தால் தலா 5 ஆயிரம் ரூபாயும், அதற்கும் மேற்பட்ட விதிமீறல் தொந்தரவுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதைத் தவிர்க்க DND என்று குறிப்பிட்டு தொல்லை தரும் நிறுவனத்தின் பெயரை டைப் செய்து STOP என்று குறிப்பிட்டு 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments