கனடாவில் 2 நாட்களில் 7.10 லட்சம் மின்னல்கள்..! 135 இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ

0 2629

னடாவில் மின்னல் தாக்குதலால் 135க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மேற்கு ஆல்பர்ட்டாவில் ஜூன் 30 மற்றும் ஜுலை ஒன்றாம் தேதிகளில் மொத்தம் 7 லட்சத்து 10,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதனால் வனப்பகுதிகள் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன.

வார இறுதிக்குள் ஒரு லட்சம் ஹெக்டர் பகுதிகளை காட்டுத்தீ அழிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், வனத்தை சுற்றிவசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments