கொரோனா 2ஆம் அலையில் திணறும் கேரளா, மகாராஷ்டிரா..! தொற்றிலிருந்து மெதுவாக மீண்டு வருவதாக புள்ளி விவரங்களில் தகவல்

0 3880
கொரோனா 2ஆம் அலையில் திணறும் கேரளா, மகாராஷ்டிரா..! தொற்றிலிருந்து மெதுவாக மீண்டு வருவதாக புள்ளி விவரங்களில் தகவல்

கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களான கேரளாவும், மகாராஷ்டிராவும், பாதிப்புகளில் இருந்து மிகவும் மெதுவாகவே மீண்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் முடிந்த வாரத்தில், தேசிய அளவில் தொற்று எண்ணிக்கை 11 சதவிகிதம் குறைந்தது. ஆனால் மகாராஷ்டிராவில் 4 சதவிகித குறைவு மட்டுமே பதிவாகி உள்ளது.

அதே நேரம், கேரளாவில் அந்த காலகட்டத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் தேசிய அளவில் 3 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதில் அதில் 50 சதவிகிதம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments