மும்பையில் இருந்து கார் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

0 1914
மும்பையில் இருந்து கார் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

த்தியப் பிரதேசத்தில் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து இந்தூர் வழியாக மாருதி எர்டிகா வாகனத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் குறிப்பிட்ட வாகனத்தை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இந்தூர், போபால் நெடுஞ்சாலையில் மாருதி எர்டிகாவை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர்.

அதில் காரில் ரகசிய அறையில் வைக்கப்பட்ட 5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

இந்தத் தங்கத்தை வாங்குவதற்காக ஏற்கனவே 2 கோடியே 20 லட்சம் ரூபாயை ரொக்கமாகக் கொடுத்துள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments