வனவளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்ய பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு

0 2428
வனவளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்ய பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு

ன வளங்களைப் பாதுகாத்து மேலாண்மை செய்யும் வகையில், பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், பழங்குடியினர் விவகார அமைச்சகமும் சேர்ந்து இன்று கையெழுத்திடுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வனப் பகுதிகளில் பரம்பரையாக வாழ்ந்து வரும் பழங்குடியினருக்கு வனப் பகுதிகளில் உரிமை அளித்து, அங்கு அவர்கள் பாரம்பரிய தொழில் புரியும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர்,அர்ஜுன் முண்டா மற்றும் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments