நாடாளுமன்றம், சட்டசபைகளில் அதிகரிக்கும் அமளி சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் கருத்து

0 1905
நாடாளுமன்றம், சட்டசபைகளில் அதிகரிக்கும் அமளி சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் கருத்து

நாடாளுமன்றம், சட்டசபைகளில் அதிகரிக்கும் அமளி சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய எதிர்க்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீடு வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், அவையில் எம்.எல்.ஏ.க்கள் மைக்கை பிடுங்கி எறிந்து, பொது சொத்துகளை நாசப்படுத்தும் செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

அவையில் உறுப்பினர்கள் நாகரிக அமைதி காப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் நாடாளுமன்றமும், சட்டசபையும் நமது ஜனநாயகத்தை காப்பவை என்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments