தகவல் தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் பின்பற்றவில்லை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

0 2265

இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த 1ம் தேதி வரை ட்விட்டர் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து ட்விட்டர் நிறுவனம் முரண்பட்டு வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், பிற சமூக ஊடகங்களுக்கு பிப்ரவரி 25 முதல் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்ட போதும் அதற்காக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆனாலும் கடந்த 1ம் தேதி வரை விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், முதன்மை அதிகாரியை நியமிக்கவில்லை என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments