தமிழ்நாட்டில் மேலும் 3,715 பேருக்கு கொரோனா ; 4,029 பேர் டிஸ்சார்ஜ்

0 4051
தமிழ்நாட்டில் மேலும் 3,715 பேருக்கு கொரோனா ; 4,029 பேர் டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 ஆயிரத்து 715 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 436 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூரில் வைரஸ் தொற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 4 ஆயிரத்து 29 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு 24 வயது வேலூர் இளம்பெண் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்தனர்.

மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்து 926பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments