கூட்டுறவு சங்க நிர்வாகங்களை கலைக்கப்போவதில்லை-தமிழக அரசு

0 2566
கூட்டுறவு சங்க நிர்வாகங்களை கலைக்கப்போவதில்லை-தமிழக அரசு

தற்போது செயல்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்க நிர்வாகங்களை கலைக்கப்போவதில்லை என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவாதத்தை ஏற்று, அது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகங்களை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறியதற்கு எதிராக 30 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணகுமார்,அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்தார். பின்னர் நடவடிக்கைக்கு உள்ளாகும் கூட்டுறவு சங்கங்கள் சட்டப்பூர்வ நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என அவர் தீர்ப்பளித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments