மகாராஷ்டிரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் ஓராண்டுக்கு இடைநீக்கம்

0 4731
மகாராஷ்டிரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் ஓராண்டுக்கு இடைநீக்கம்

மகாராஷ்டிரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பேரவைக்குத் தலைவர் வராத நிலையில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளாட்சி மன்றங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றுவதற்காக, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பாஜக உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதுடன் அவைத் தலைவர் இருக்கையின் அருகில் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவை நாகரிகமற்ற சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறி பாஜக உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments