8 போடாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் மத்திய அரசின் உத்தரவு குறித்து ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

0 3198
8 போடாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் மத்திய அரசின் உத்தரவு குறித்து ஆலோசனைக்குப் பின்பே முடிவு

ஓட்டுநர் உரிமம் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 8 வடிவில் வாகனம் ஓட்டிக் காட்ட வேண்டாம் என்கிற மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவெடுக்கப்படும் எனத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் குளிர்சாதன வசதிப் பேருந்துகளைத் தவிர அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என கூறினார். போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை உள்ளதாகவும், பத்தாயிரம் பேரை வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, வீட்டு வசதித்துறை அமைச்சருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments