தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 7582
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கலில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments