கொரோனா எதிரொலியாக ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத காணிக்கை 36 கோடி ரூபாயாக குறைந்தது - தேவஸ்தானம்

0 2853

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும், பக்தர்களால் 100 முதல் 130 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா எதிரொலியாக பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து, கடந்த மாதம் 36 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அங்கு இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, 300 ரூபாய் சிறப்பு தரிசனம், விஐபி தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், கடந்த மாதம் தரிசனம் செய்த 4 லட்சத்து 14 ஆயிரத்து 674 பக்தர்களால், 36 கோடி ரூபாய் மட்டுமே காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments