திறப்பு விழாவில் ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் இல்லாததால் கடுப்பாகி கையால் அறுத்தெரிந்த தெலுங்கானா முதலமைச்சர்..!

0 4622

தெலுங்கானாவில் ஒரு திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்ற முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் இல்லாததால் கடுப்பாகி  கையாலேயே கட் செய்தார்.

அங்கு Rajanna Sircilla மாவட்டம், மெடிப்பள்ளியில் அரசு கட்டிக் கொடுத்துள்ள குடியிருப்புகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்றார். திறப்பு விழாவிற்கு ரிப்பன் கட்டி வைத்திருந்தவர்கள் அதை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை ஏற்பாடு செய்யவில்லை.

கடைசி நேரத்தில் ஒருவர் மாறி ஒருவர் கத்தரிக்கோல் எங்கே எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முதலமைச்சர், பின்னர் கையாலேயே ரிப்பனை கட் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments