ஜூலை 11ஆம் நாள் விண்வெளிக்குச் செல்லும் ஆந்திர மாநிலப் பெண்

0 2540
ஜூலை 11ஆம் நாள் விண்வெளிக்குச் செல்லும் ஆந்திர மாநிலப் பெண்

ந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிரிசா பந்த்லா என்கிற பெண் ஜூலை 11ஆம் நாள் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரிட்டன் கோடீசுவரர் ரிச்சர்டு பிரான்சன் அமெரிக்காவில் விர்ஜின் கேலக்டிக் என்னும் பெயரில் விண்வெளி முகமை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜூலை 11ஆம் நாள் யூனிட்டி 22 என்கிற விண்கலம் அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்குப் புறப்பட உள்ளது.

அதில் ரிச்சர்டு பிரான்சனுடன் மேலும் 5 பேர் செல்கின்றனர். அவர்களில் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிரிசா பந்த்லாவும் ஒருவர்.

வானூர்திப் பொறியியல் படித்துள்ள இவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments