காஷ்மீரில் புதிதாக உருவெடுத்துள்ள ஸ்லீப்பர் செல்களால் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவால்

0 3065
காஷ்மீரில் புதிதாக உருவெடுத்துள்ள ஸ்லீப்பர் செல்களால் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவால்

காஷ்மீரில் மக்களுடன் மறைந்து வாழும் ஸ்லீப்பர் செல்கள் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இருந்து அல்லது எல்லைக்கு அப்பால் இருந்து இயங்கி வந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளாக பட்டியலிடப்படாத உள்ளூர் இளைஞர்களுக்கு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தீவிரவாத இயக்கங்கள் போதிய பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஆனால் இந்த இளைஞர்கள் எல்லை தாண்டிச் சென்று ஆயுதப் பயிற்சியை மேற்கொள்வதில்லை என்று கூறும் அதிகாரிகள், தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விடும் இவர்களைப் போன்ற இளைஞர்களை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் ஸ்லீப்பர் செல்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்படுவதால் போலீஸ் அதிகாரிகள், சிறிய கட்சிகளின் தலைவர்கள் போன்றவர்களை தாக்கி விட்டு தப்பி விடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments