மக்களவையில் காங். கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவாரா?

0 2717

மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சித் தலைமை பல அதிரடி மாற்றங்களைத் திட்டமிட்டு வரும் நிலையில் ராகுல் காந்தியை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக இரண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் தலைவர் பதவி நேரு குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இடைக்காலத் தலைவராக உள்ள சோனியா காந்தி தமது பொறுப்புகளை வேறு ஒரு தலைவருக்கு விட்டுத்தர விரும்பும் சூழலில் கட்சித் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்பாரா அல்லது மக்களவை காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகிப்பாரா என்பதே கட்சியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments