மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான சிவக்குமார் மற்றும் கூட்டாளிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்

0 4279
மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான சிவக்குமார் மற்றும் கூட்டாளிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்

துரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 12 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவகுமார், கூட்டாளி மதர்ஷா ஆகிய இருவரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரெங்கநாதபுரம் சோதனை சாவடியில் சிக்கினர்.

அவர்களைக் கைது செய்த போலீசார் இருவரையும் மதுரை கொண்டுவந்து கூடல்புதூர் காவல்நிலையத்தில்  வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இருவரும் மதுரை கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் முக்கிய குற்றவாளியான சிவக்குமார், மதர்ஷா ஆகிய இருவரையும்  வரும் 16ம் தேதி வரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து விருதுநகர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments