ஜம்மு விமானபடைத்தள டிரோன் தாக்குதல் எதிரொலி ; ஸ்ரீநகரில் டிரோன்கள் பறக்க தடை

0 2984
ஜம்மு விமானபடைத்தள டிரோன் தாக்குதல் எதிரொலி ; ஸ்ரீநகரில் டிரோன்கள் பறக்க தடை

 ஜம்மு விமானப்படை தளத்தில் கடந்த வாரம் டிரோன்கள் வாயிலாக தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக, ஸ்ரீநகரில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விண்ணூர்திகள் பறக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ராணுவ மையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் வான்பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த தடையை விதிப்பதாக ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்காக டிரோன்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. டிரோன் கேமராக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை உள்ளூர் காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments