அணையில் நீர் திறப்பதில் தகராறு இருமாநிலக் காவல்படையினர் குவிப்பு..!

0 9005
அணையில் நீர் திறப்பதில் தகராறு இருமாநிலக் காவல்படையினர் குவிப்பு..!

கிருஷ்ணா ஆற்றில் உள்ள புலிச்சிந்தலா அணையில் நீர் மின்னுற்பத்தி செய்வது தொடர்பான தகராறில், ஆற்றின் இருபுறமும் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இருமாநிலக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தெலங்கானாவின் நல்கொண்டா, ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டங்கள் இடையே கிருஷ்ணா ஆற்றில் புலிச்சிந்தலா என்னுமிடத்தில் 45 டிஎம்சி கொள்ளளவுள்ள அணை கட்டப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோது கட்டப்பட்ட இந்த அணை ஆந்திரத்தில் 13 லட்சம் ஏக்கரில் நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும்.

தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அணை ஆந்திரத்தின் கட்டுப்பாட்டிலும், நீர்மின் நிலையம் தெலங்கானாவின் கட்டுப்பாட்டிலும் வந்தது.

அணையில் உள்ள நீரைத் திறந்து தெலங்கானா நீர்மின்னுற்பத்தி செய்து வருகிறது. இந்த நீர் ஆற்றில் பாய்ந்து 3 டிஎம்சி கொள்ளளவுள்ள பிரகாசம் அணைக்கட்டு நிரம்பி வீணாகக் கடலுக்குச் செல்கிறது.

இதனால் பாசனத் தேவையுள்ளபோதே நீரைத் திறக்க வேண்டும் என்றும், இப்போது திறக்க வேண்டாம் என்றும் ஆந்திர மாநிலம் கூறுகிறது. தங்கள் பக்கமுள்ள நீர்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி செய்ய உரிமை உள்ளதாகவும், சட்டப்படி தான் மின்னுற்பத்தி செய்து வருவதாகவும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகராறால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இரு மாநிலக் காவல்துறையினரும் அணைக்கு இருபுறமும் அவரவர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments