பள்ளி மாணவிகளின் ஆன்லைன் வாட்சப் குழுவில் ஆபாசப் படங்கள் ; மாணவி ஒருவரின் பெயரில் அட்டகாசம் செய்து வந்த காமுகன் கைது

0 3221
பள்ளி மாணவிகளின் ஆன்லைன் வாட்சப் குழுவில் ஆபாசப் படங்கள்

மன்னார்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் இருந்து தவறுதலாக தனக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியைக் கொண்டு மாணவிகள் குழுவில் இணைந்த காமுகன் ஒருவன், அதில் ஆபாசப் படங்களை அனுப்பியதால் போலீசில் சிக்கியுள்ளான்.

அந்தப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவிகளுக்கு என தனியாக குழு தொடங்கி, அதில் பாடங்கள் பகிரப்பட்டு வந்துள்ளன. அந்தக் குழுவில் மாணவி ஒருவரின் பெயரில் இருந்த எண்ணில் இருந்து ஆபாசப் படங்கள், வீடியோக்கள் குழுவில் பகிரப்பட்டு வந்துள்ளன.

உடனடியாக அந்த எண்ணை நீக்கிய ஆசிரியர்கள், போலீசில் புகாரளித்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் என்ற நபர் சிக்கினான். பள்ளியிலிருந்து மாணவி ஒருவருக்கு அனுப்பப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் ஒரேயொரு எண் தவறுதலாக மாறி மோகன்குமாரின் எண்ணுக்கு வந்துள்ளது. அதனை சாதகமாக்கிக் கொண்டவன், அந்த மாணவி பெயரிலேயே குழுவிலும் இணைந்துள்ளான் என்பது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments