தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 7681
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்பச்சலனத்தின் காரணமாக 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

ஜூலை 8ஆம் நாள் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒருசில பகுதி பகுதிகளில் இலேசான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments