கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படையினர்

0 1865
கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படையினர்

டுக்கடலில் மீன்பிடி வலைகளை வெட்டியும், மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் வெறுங்கையுடன் கரைதிரும்பியுள்ளனர்.

நேற்று அறுநூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மீனவர்களை விரட்டியடித்தனர்.

மீண்டும் இன்று அதிகாலை அதே பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் பத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகளில் வலைகளை வெட்டிக் கடலில் வீசியுள்ளனர். 

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர். இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தால் மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments