"மக்கள் மீதான அக்கறையால் தளர்வுகள் அறிவிப்பு" -முதலமைச்சர் பேச்சு

0 3518

கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நடப்பது என, ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த அலையையும் தாங்கும் வல்லமை அரசுக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.

தளர்வு அறிவிக்கப்பட்டதால் எந்த விதிகளையும் பின்பற்றத் தேவையில்லை என நினைக்கக் கூடாது என்றும், தளர்வுகளை அனுமதித்ததற்குக் காரணம் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதுள்ள அக்கறைதான் என்றும் தெரிவித்துள்ளார்.

தளர்வுகளின்போது கட்டுப்பாடுகளை மீறினால் மூன்றாவது அலை உருவாகிற சூழல் வரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments