கர்நாடகாவில் நாளை முதல் பேருந்து, மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி..! வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என அரசு அறிவிப்பு

0 2789

ர்நாடகத்தில் நாளை முதல் பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்கள் நூறு சதவீதப் பணியாளர்களுடன் பணிபுரிவது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட அனுமதிக்கப்ப்டடுள்ளது.

இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்ற போதும் சனி, ஞாயிறுக்கான வார இறுதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 15 நாட்களுக்கு இந்த புதிய தளர்வுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மதுபான விடுதிகள் போன்றவற்றுக்கான தடை நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments