உத்தரகாண்ட்டில் 4 மாதங்களில் மூன்று முதலமைச்சர்கள்..! புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு

0 2490

த்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பிற்பகல் பதவியேற்க உள்ளார்.

அம்மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தீரத்சிங் ராவத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை தந்தார்.

இதையடுத்து நேற்று பாஜக மேலிடப் பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் பாஜக எம்.எல்,ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காத்திமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான புஷ்கர் பாஜக இளைஞரணி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பாஜக அரசு பதவியேற்ற நான்கே மாதங்களில் அவர் உத்தரகாண்டில் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments