"நாடு முழுவதும் 35 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" -மத்திய அரசு தகவல்

0 2451

நாடு முழுவதும் இதுவரை 35 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், 18 முதல் 44 வயது பிரிவில் 28 லட்சத்து 33 ஆயிரத்து 691 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 3 லட்சத்து 29 ஆயிரத்து 889 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் நேற்று செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் 58 லட்சத்து 16 ஆயிரம் பேர் முதல் டோசையும், ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் 2ம் டோஸ் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments