"உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம்" -யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

0 3778

த்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று அம்மாநில பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜில்லா பஞ்சாயத் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 75 இடங்களில் 66 இடங்களில் மகத்தான வெற்றியை பாஜக பெற்றதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி, இந்த வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் கடந்த நான்கரை ஆண்டுகள் தமது ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தாமல் விடவில்லை என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமது அரசு மக்களின் ஒத்துழைப்புடன் போராடி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments