ஆணின் வெறிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்..! நாக் அவுட் நாகமுத்து ரகளை

0 6423

பரமக்குடி அருகே இடத் தகறாரை ஊதி பெரிதாக்கிய மனைவியால் ஆத்திரமடைந்த கணவன், தனது அண்டை வீட்டார் மீது சரமாரியாக கல்வீச்சி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கணவனுக்கு துணையாக மண்வெட்டியுடன் களம் இறங்கிய பெண் கபாலியால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த வடிவேல் மற்றும் நாகமுத்து ஆகிய இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். இவர்களுக்கிடையே ஏற்பட்ட இடப்பிரச்சனையால் இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள வடிவேலுவும், நாகமுத்துவும் கையில் அரிவாளை தூக்கியுள்ளனர்

இருவரும் கையில் அரிவாளுடன் நிற்பதை, அந்த ஊரை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து உஷாரான அவர்கள் இருவரும் அரிவாளை கீழே வைத்துவிட்டு பின்வாங்கியுள்ளனர்

பிரச்சனையை ஊதி பெரிதாக்கிய நாகமுத்துவின் மனைவி பஞ்சவர்ணமோ அடங்காமல் கையில் மண்வெட்டியுடன் தாக்குதலுக்கு தயாரானதால் மீண்டும் ஆவேசமான கணவன் நாகமுத்து, வடிவேல், அவரது தாய் சாவித்திரியை கற்களை கொண்டு எறிந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது

ஒரு கட்டத்தில் காயத்துடன் தப்பி ஓடியவர் மீது கணவன், மனைவி, மகன் என 3 பேரும் கற்களை வீசி கடும் தாக்குதல் நடத்தினர்

இதில் காயம் அடைந்த வடிவேலு, அவரது தாய் சாவித்திரி ஆகியோர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்
வடிவேலு அளித்த புகாரின் பேரில் நாக் அவுட் நாகமுத்து, மனைவி பஞ்சவர்ணம், கோபால் ஆகிய 3 பேர் மீதும் எமனேஸ்வரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பொதுவாக இது போன்ற தகராறு நடக்கும் போது ஆவேசமாகும் ஆண்களை பெண்கள் சமாதனப்படுத்தி பொறுமையே பெருமை சேர்க்கும் என்று வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம், ஆனால் இந்த சம்பவத்தில் கணவன் பின் வாங்கினாலும் மனைவி மண்வெட்டியுடன் ஆவேசம் காட்டி தூண்டிவிட்டதால் வீட்டு வாசலில் இருந்த செங்கற்களை இஷ்டத்துக்கு எடுத்து தாக்குதல் நடத்திய விபரீத சம்பவம் அரங்கேறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் மட்டுமல்ல இது போன்ற வெறி கொண்ட தாக்குதலுக்கு பின்னாலும் சில பெண் கபாலிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments