போலீசை நம்பி மோசம் போன நடிகை ராதா ; கண்ணீருடன் காவல்நிலையத்தில் புகார்

0 7384
போலீசை நம்பி மோசம் போன நடிகை ராதா

ரவுடிகளை ஏவி கழுத்தை அறுத்துவிடுவேன் என தனது கணவரும் காவல் உதவி ஆய்வாளருமான வசந்தராஜா மிரட்டுவதாக நடிகை ராதா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கணவர் மீதும் அவருக்கு உதவியாக செயல்படும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் நடிகை ராதா புகாரளித்துள்ளார்.

 

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தயாரிப்பாளர் ஒருவரைத் திருமணம் செய்து விவாகாரத்துப் பெற்ற நடிகை ராதா, அதன் பின்னர் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கணவர் வசந்தராஜா மீது ராதா புகார் ஒன்றை அளித்தார். அதில் கணவர் தன் மீது சந்தேகப்பட்டு சித்ரவதை செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தனது புகாரை ஏற்காமல் பெண் உதவி ஆய்வாளரான பாரதி வற்புறுத்தி புகாரை வாபஸ் வாங்க வைத்து, இனி சேர்ந்து வாழ்வதாக இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டதாக நடிகை ராதா கூறினார்

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பரங்கிமலை இணை ஆணையரிடமும் அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் மீண்டும் புகாரளித்துள்ளார் நடிகை ராதா. வசந்தராஜா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியிலான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையின்போது தனக்குச் சாதகமாகப் பேச வேண்டும் என்றும் இல்லையென்றால் 500 ரூபாய் கொடுத்தால் போதும் கண்ணகி நகர் பசங்க கழுத்தை அறுத்துவிடுவார்கள் என்றும் கணவர் மிரட்டுவதாகக் கண்ணீருடன் கூறுகிறார் நடிகை ராதா.

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வசந்தராஜா எழுதிக் கொடுத்த கடிதம் தற்போது இல்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொண்டதாகக் கூறும் நடிகை ராதா, அதற்கு உதவி ஆய்வாளர்கள் பாரதி மற்றும் இளம்பரிதி ஆகியோர் உடந்தை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments