சிக்கிமில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு ;21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்

0 3401
சிக்கிமில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

இந்திய-சீனா எல்லையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர் தேவ ஆனந்தின் உடல் சொந்த கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த தேவ ஆனந்த் கடந்த 30ஆம் தேதி சிக்கிமில் பணி முடிந்து ராணுவ வாகனத்தில் சென்றபோது, மலைப் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

இதில் உயிரிழந்த தேவ ஆனந்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments