அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட எருமை மாடு திடீரென ஆக்ரோஷமாகி பெண்ணை முட்டி தூக்கி வீசியதால் பரபரப்பு

0 2458
அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட எருமை மாடு

மத்திய பிரதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென ஆக்ரோஷமாகி பெண் ஒருவரை முட்டி தூக்கி வீசியக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள தனியார் பள்ளிகளை திறக்கக் கோரி Shajapur மாவட்டத்தில் பள்ளி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே இதேபோன்று பல முறை கோரிக்கை வைத்தும் அரசு ஏற்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட எருமை மாடுகளை போராட்டக் களத்திற்குள் கொண்டு வந்தனர்.

அதில் ஒரு எருமை திடீரென ஆக்ரோஷமடைந்து அங்கும், இங்கும் ஓடி போராட்டக்காரர்களை தெறித்து ஓட வைத்தது. பின்னர், பெண் ஒருவரை எருமை மாடு முட்டிதூக்கி வீசியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments