நீட் தேர்வு பாதிப்புக் குறித்து ஆராயக் குழு அமைத்ததை எதிர்த்துக் வழக்கு; ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி எனத் தமிழக அரசு கருத்து

0 5552
நீட் தேர்வு பாதிப்புக் குறித்து ஆராயக் குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்ததை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளது ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி என்றும், விளம்பர நோக்கமுடையது என்றும் தமிழ்நாடு அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவப் படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஒரு ஆய்வு தேவை என்பதால் குழு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசு பள்ளியிலும் தமிழ் வழியிலும் படித்தவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே குழு அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் குழு இன்னும் அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments