மார்க்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது தொடர்பாக விளக்கம்..! தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -துரைமுருகன்

0 3025

மார்க்கண்டேய நதியைச் சார்ந்துள்ள கிருஷ்ணகிரி மக்களின் நலனைக் காக்கவும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணையின் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அரை டி.எம்.சி கொள்ளளவுள்ள ஓர் அணையைக் கர்நாடக அரசு கட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதை எதிர்த்துத் தமிழக அரசு தொடுத்த வழக்கில், பிரச்சனைக்குத் தீர்வுகாண நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 29ஆம் நாள் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்கத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகம் அணை கட்டியதால் கிருஷ்ணகிரி வட்டத்தில் மார்க்கண்டேய நதியால் பாசனம் பெறும் 870 எக்டேர் நிலம் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments