இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளுக்கு இணங்க பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கான பதிவுகள் நீக்கம்

0 2288
இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளுக்கு இணங்க பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கான பதிவுகள் நீக்கம்

ந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளுக்கு இணங்க பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் இலட்சக்கணக்கான பதிவுகளை நீக்கியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பதிவுகளுக்கு அதை நடத்தும் நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் எனப் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15 வரையான காலக்கட்டத்தில் வன்முறை உள்ளடக்கம் கொண்ட 25 இலட்சம் பதிவுகளை நீக்கியதாகத் தெரிவித்துள்ளது. ஸ்பேம் என அறியப்பட்ட இரண்டரைக் கோடி உள்ளடக்கங்களையும், ஆபாசப் படங்கள் தொடர்பான 18 இலட்சம் பதிவுகளையும் நீக்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் வலைத்தளம் தற்கொலை, தன்னைக் காயப்படுத்துதல், வன்முறை, ஆபாசப்படங்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் இடம்பெற்ற 18 இலட்சத்துக்கு மேற்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments