”2 டோஸ் தடுப்பூசி போட்டால் சுமார் 98 சதவீத பாதுகாப்பு கிடைக்கும்” -பஞ்சாப் ஆய்வை சுட்டிக்காட்டி நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

0 3883

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோசுகளையும் போட்டால் இறப்பில் இருந்து சுமார் 98 சதவிகித பாதுகாப்பு கிடைக்கும் என்றும் ஒரு டோஸ் மட்டும் சுமார் 92 சதவிகித பாதுகாப்பை தரும் என பஞ்சாபில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் காவல்துறையினரிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாக அவர் கூறினார்.

ஒரே ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 போலீசாரில், தொற்று ஏற்பட்டவர்களில் 9 பேர் இறந்தனர். இரண்டு டோசுகளும் போடப்பட்ட 42 ஆயிரத்து 720 பேரில், தொற்று பாதித்த 2 பேர் மட்டுமே இறந்தனர்.

தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தீவிர நோயையும், இறப்பையும் குறைக்கிறது என்பது இதில் இருந்து தெரிய வந்துள்ளதால், அவற்றின் மீது நம்பிக்கை வைத்து அதை போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் வி.கே.பால் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments