”கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களை சமமாக நடத்த வேண்டும்” -ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய அரசு கடிதம்

0 2446

ந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டு வரும் இந்தியர்களை, ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை போன்று சமமாக நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கும், இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இது குறித்து கடிதம் அனுப்பி உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டெல்லியில் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் 10 ஆவதாக நெதர்லாந்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ள நிலையில் , இந்தியாவின் இந்த கோரிக்கையை பல ஐரோப்பிய நாடுகளும் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோவிஷீல்டு போட்ட இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதில் உள்ள சிக்கல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments