நாட்டிலேயே முதன்முறையாக அட்டைப் பெட்டிகளில் தண்ணீர் விற்பனை.!

0 7072

ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் இருவர் பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பெரிதும் குறைக்கும் வகையில் அட்டைப் பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

சுனீத், சைதன்யா ஆகிய இருவரும் கேரோ வாட்டர் என்னும் பெயரில் அட்டைப் பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்கும் தொழிலை நாட்டிலேயே முதன்முறையாகத் தொடங்கியுள்ளனர்.

5 லிட்டர் தண்ணீர் உள்ள அட்டைப் பெட்டியின் உட்புறத்தில் 45 கிராம் பிளாஸ்டிக்கும், 20 லிட்டர் தண்ணீர் உள்ள அட்டைப்பெட்டியில் 90 கிராம் பிளாஸ்டிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை 85 விழுக்காடு குறைத்துள்ளதாகவும், காலி அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சிக்குத் தாங்களே எடுத்துக் கொள்வதாகவும் இளந்தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments